தமிழ்நாடு

ராஜாஜி பிறந்த நாள்: அமைச்சர் கடம்பூர் செ.ராஜு மரியாதை

10th Dec 2020 10:52 AM

ADVERTISEMENT


கோவில்பட்டி: மூதறிஞர் ராஜாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை முன்பு அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இதில், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட ஊராட்சி தலைவி சத்யா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சந்திரசேகர், தங்க மாரியம்மாள் தமிழ்செல்வன்,  கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவி கஸ்தூரி சுப்புராஜ், துணை தலைவர் பழனிசாமி, முன்னாள் துணை தலைவர் சுப்புராஜ், அதிமுக நகர செயலாளர் விஜயபண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், அய்யாத்துரை பாண்டியன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் வடக்கு மாவட்ட பாசறை செயலாளர் துறையூர் கணேஷ்பாண்டியன், ஜெயலலிதா பேரவை தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொருளாளர் வேலுமணி, நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாத்துரை, முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ரத்தினவேல், மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மகேஷ்குமார், அமைப்பு சாரா ஒட்டுர் அணியைச் சேர்ந்த செண்பகமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT