தமிழ்நாடு

மன்னார்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

10th Dec 2020 04:13 PM

ADVERTISEMENT

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து, அதனை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, புதுதில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னார்குடி நடேசன்தெரு மன்னை ப.நாராயணசாமி சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு,விடுதலைச் சிறுத்தைகள் மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலர் மேலவாசல் செங்குட்டுவன் தலைமை வகித்தார். கட்சியின் தெற்கு மாவட்டச் செயலர் வி.த.செல்வம், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலர் ஆர்.ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாவட்ட பொருளாளர் வெற்றி, மாவட்ட துணைச் செயலர் முல்லைவவி வன், நகரச் செயலர் எ.அறிவுக்கொடி,ஒன்றிய செயலர்கள் ஜெயக்குமார் (மன்னார்குடிகிழக்கு), புதியவன்(நீடாமங்கலம்), திருநாவுக்கரசு(கோட்டூர்) உள்ளிட்டோர் கலந்துகொண்டு. மத்திய அரசைக் கண்டித்தும் , விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT