தமிழ்நாடு

மக்களுக்கு ஆற்றிய நல்ல திட்டங்களை குறித்து விவாதிக்க திமுக தயாரா? - கேபி முனுசாமி எம்.பி

10th Dec 2020 01:16 PM

ADVERTISEMENTதிமுக ஆட்சியில் மக்களுக்கு செய்த நல திட்டங்கள் குறித்தும் அதிமுக ஆட்சியில் மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்தும் விவாதிக்கத் தயாரா? என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ராசா பேசுவது அநாகரிகமானது. அவர் தரங்கெட்ட மனிதன்.
அதிமுக ஆட்சியில் மக்களுக்கு நிறைவேற்றிய நல்ல திட்டங்கள் குறித்தும் திமுக ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும் விவாதிக்க தயாரா?

வேளாண் மசோதாக்களால் தமிழ்நாட்டில் எந்த விவசாயியும் பாதிக்கப்பட மாட்டார்கள்.விவசாயிகளின் நலன் கருதியே இந்த மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சியை தொடங்கட்டும். கொள்கையை தெரிவிக்கட்டும் பின்னர் அது குறித்து கருத்து தெரிவிப்போம் என்றார். 

அப்போது அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் கே அசோக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

Tags : DMK ready
ADVERTISEMENT
ADVERTISEMENT