தமிழ்நாடு

கன மழையால் பாதிக்கப்பட்ட வெள்ளப்பள்ளம் பகுதி மக்களுக்கு  திமுக நிவாரண உதவி

10th Dec 2020 10:45 AM

ADVERTISEMENT

 

சீர்காழி: சீர்காழி தாலுக்கா புதுத்துறை ஊராட்சிக்குள்பட்ட,வெள்ளப்பள்ளம் கிராம கிராமத்தில் கடந்த ஏழு தினங்களாக பெய்த தொடர் கனமழையால் பல்வேறு குடியிருப்புப் பகுதிகள் மழைநீர் சூழ்ந்தது மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

சீர்காழி பகுதியில் இருக்கும் வடிகால் நீர் முழுவதும் வெள்ளப்பள்ளம் உப்பனாற்றின் வழியாகவே வடியும் சூழல் உள்ளதால் இந்த கிராமத்தை நான்கு புறமும் நீரால் சூழப்பட்டுள்ளது, தற்போது எங்கும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் கிள்ளை.ரவீந்திரன் நேரில் சென்று ஆறுதல் கூறி அரிசி மற்றும் மளிகை பொருள்கள் ஆகிய நிவாரண உதவிகளை வழங்கினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT