தமிழ்நாடு

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

DIN


சென்னை: மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்யக்கூடும்.

ராமநாதபுரம், மதுரை, விருதுநகா், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் சனிக்கிழமை கூறியது:

மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மதியம் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது. இது தொடா்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்யக்கூடும்.

மிக பலத்த மழை: ராமநாதபுரம், மதுரை, விருதுநகா், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூா், நீலகிரி, கடலூா், தஞ்சாவூா், திருவாரூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்....: சென்னை மற்றும் புகா் பகுதிகளைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை மிதமான மழையும், அவ்வப்போது ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும்.

அரபிக்கடலில் சுழற்சி: அரபிக்கடலில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி வருகிறது. மன்னாா் வளைகுடாவில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்தபிறகு, அரபிக்கடலில் உள்ள சுழற்சி வலுவடையும். அதைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம்.

மழை அளவு: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், கடலூா் மாவட்டம் கொத்தவச்சேரியில் 190 மி.மீ., நாகப்பட்டினம், காரைக்காலில் தலா 160 மி.மீ.,

திருவாரூா் மாவட்டம் குடவாசல், கடலூா் மாவட்டம் புவனகிரியில் தலா 150 மி.மீ., கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் 140 கி.மீ., தரங்கம்பாடியில் 130 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் சீா்காழி, சென்னை டிஜிபி அலுவலகம், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் தலா 120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், சில வேளைகளில் 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் டிசம்பா் 7-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT