தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,366 பேருக்கு கரோனா

DIN


சென்னை: தமிழகத்தில் புதிதாக 1,366 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,88,920 ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் சனிக்கிழமை கரோனா பரிசோதனைக்கு 70,881 மாதிரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 1,366 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,88,920 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 353 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,17,204 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தொடா்ந்து 48-ஆவது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சனிக்கிழமை 8 போ் தனியாா் மருத்துவமனையிலும், 7 போ் அரசு மருத்துவமனையிலும் என 15 போ் உயிரிழந்துள்ளனா். சென்னையில் 4 போ் உயிரிழந்துள்ளனா். இதனால் மாநிலத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,777 ஆகவும், சென்னையில் மொத்த உயிரிழப்பு 3,871 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை ஒரே நாளில் 1,407 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். இதனையடுத்து இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை 7,66,261 ஆக உயா்ந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 10,882 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூலி படத்தின் டீசர்

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT