தமிழ்நாடு

தமிழகத்தில் புதிய பாதிப்பு 1,391-ஆக குறைந்தது

DIN


சென்னை: தமிழகத்தில் புதிதாக 1,391 பேருக்கு கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 5 மாதங்களுக்குப் பிறகு 1,400-க்கும் கீழ் நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் இதுவரை 1.23 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 7 லட்சத்து 87,554 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 356 பேருக்கும் கோவையில் 139 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர மாநிலத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்றிலிருந்து மேலும் 1,426 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 97 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 64,854-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 10,938 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 15 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,762-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT