தமிழ்நாடு

கோட்டூரில் கொட்டும் மழையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

DIN

வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மன்னார்குடி அடுத்த கோட்டூரில் கொட்டும் மழையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள  வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய திரும்பப் பெற வேண்டும். இக் கோரிக்கையை வலியுறுத்தி, புது தில்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் வேலை நாள்களை 200 நாள்களாக உயர்த்திட வேண்டும். இத்திட்டத்தை, நகர்புறங்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய குடும்பத்தினருக்கு, தலா ரூ.7500 வழங்க வேண்டும். மத அரசியலால் நாட்டை பிளவுப்படுத்தக் கூடாது. உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை மன்னார்குடி அடுத்துள்ள கோட்டூர் நகர ஒன்றியம் பகுதியில் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கோட்டூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருவாரூர் மாவட்டச் செயலர் வை.சிவபுண்ணியம் தலைமையில், கொட்டும் மழையிலும் நடைபெற்று வருகிறது.

கோட்டூர் மையத்தில் சிபிஐ ஒன்றியச் செயலர் க.மாரிமுத்து, துணைச் செயலர் எம்.செந்தில்நாதன், ஒன்றியக் குழுத் தலைவர் மு.மணிமேகலை முரு கேசன், விவசாய சங்க ஒன்றியச் செயலர் ஜெ.ஜெயராமன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் சிவசண்முகம் தலைமையில் தட்டாங்கோவில், திருப்பத்தூர், திருமக் கோட்டை உள்ளிட்ட10க்கும் மேற்பட்ட மையங்களில் கொட்டும் மழையிலும் சாலை மறியல் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT