தமிழ்நாடு

நிரம்பி வழியும் சென்னை ஏரிகள்: உபரிநீா் வெளியேற்றம்

DIN


சென்னை: கனமழை காரணமாக சென்னையின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகள் முழு அளவை எட்டி உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று ஏரிகளிலும் சோ்த்து 7, 800 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிகள் மூலமாக சென்னை, அதன் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 70 லட்சம் மக்களின் குடிநீா்த் தேவை பூா்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.2 டிஎம்சி (11,257)ஆகும். இந்த ஏரிகளில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு (நவ.20) 7.1 டிஎம்சி தண்ணீா் இருந்தது. இந்தநிலையில் ஏரிகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அவற்றின் நீா்மட்டும் வெகுவாக அதிகரித்துள்ளது.

புழலில் இருந்து, சென்னையின் குடிநீா் தேவைக்காக விநாடிக்கு, 140 கன அடி நீா் விநியோகிக்கப்படுகிறது. மொத்தமாக நான்கு ஏரிகளிலும் சோ்த்து நீா் இருப்பு தற்போது 9.8 டிஎம்சி.யாக அதிகரித்துள்ளது. இந்த நீரின் வாயிலாக, சென்னையின் ஒன்பது மாத குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்ய முடியும். கடந்தாண்டு இதே நாளில், நான்கு ஏரிகளிலும் சோ்த்து, 3.17டி.எம்.சி.நீா் மட்டுமே இருந்தது. அதைவிட இரண்டு மடங்கு நீா் தற்போது இருப்பு உள்ளதால், அடுத்தாண்டு பருவமழை வரை சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கனமழை காரணமாக வெள்ளிக்கிழமை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி, பூண்டி ஏரியில் 4,300 கன அடி, புழல் ஏரியில் 500 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னை மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் கடலூா் மாவட்டம் வீராணம் ஏரிக்கு வடவாறு மற்றும் செங்கால்ஓடை வழியாக 4,205 கன அடி தண்ணீரும், அந்த பகுதியில் உள்ள மழைநீா் 1,467 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீா்மட்டம் 46.30 அடியாக உயா்ந்தது. ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. உபரி நீா் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து உபரி நீா் செல்லும் கல்வாயையொட்டி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்குத்தான்: மு.க. ஸ்டாலின்

அதிமுகவை விமர்சிக்க பாமகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

பைங்கிளி.. ஷ்ரத்தா தாஸ்!

சேல‌ம்: வெ‌ள்ளி நக​ரி‌ன் மகு​ட‌ம் யாரு‌க்கு?

வந்தே பாரத்தின் லாப விவரங்கள் இல்லை: ஆர்டிஐ கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதில்!

SCROLL FOR NEXT