தமிழ்நாடு

வாசுதேவநல்லூரில் ஜெயலலிதா நினைவு தினம்

5th Dec 2020 01:02 PM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி பேருந்து நிலையம் அருகே அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலர் மனோகரன் எம்எல்ஏ, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் ,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வெங்கடேசன், வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய செயலர்  துரைப்பாண்டியன், வடக்கு ஒன்றிய செயலர்  மூர்த்தி பாண்டியன், வாசுதேவநல்லூர் பேரூர் செயலர் சீமான் மணிகண்டன், மாவட்ட மாணவரணி துணைச் செயலர் மூர்த்தி, மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் முருகையா, ஒன்றிய ஜெ. பேரவை செயலர் சாமுவேல், ஒன்றிய அவைத்தலைவர் முகமது உசேன், நகர அவைத்தலைவர் நீராவி, துணைச் செயலர் முருகையா, ஜெ.பேரவை செயலர் முருகையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT