தமிழ்நாடு

எளாவூரில் அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

5th Dec 2020 10:03 AM

ADVERTISEMENT


 

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட எளாவூரில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்விற்கு பெரிய ஓபுளாபுரம் கூட்டுறவு சங்க தலைவரும், முன்னாள் திருவள்ளூர் மாவட்ட அதிமுக மாணவர் அணி செயலாளருமான முல்லைவேந்தன் தலைமை தாங்கினார். பெரிய ஓபுளாபுரம் அதிமுக நிர்வாகி ஏழுமலை, மாநில மீனவர் அணி துணை செயலாளர் ஜெ.சுரேஷ், குமரன்நாயக்கன் பேட்டை கே.பி.ஆரோன், நேதாஜி முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு ஆகியோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து எளாவூர் பஜாரில் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு முன்  அகல் விளக்கு ஏற்றியும், மாலை அணிவித்தும், மலர் தூவியும் அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT