தமிழ்நாடு

அதிரடிப்படையினருக்கான இரட்டை பணி மூப்பு: அரசாணை ரத்து

5th Dec 2020 09:26 PM

ADVERTISEMENT

சந்தனக் கடத்தல் வீரப்பனை வீழ்த்தியதால் அதிரடிப்படையை சேர்ந்தவர்கள் பெற்ற இரட்டை பதவி உயர்வை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சந்தனக் கடத்தல் வீரப்பனை வீழ்த்திய அதிரடிப் படையினருக்கு இரட்டை பணி மூப்பு தர அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே அதிரடிப்படையிலிருந்து 752 பேருக்கு இரட்டை பதவி உயர்வு வழங்கிய அரசாணை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அதிரடிப் படையினருக்கு மீண்டும் பணி மூப்பு வழங்கும் வகையில் பிறப்பித்த அரசாணைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதிரடிப்படையை சேர்ந்தவர்கள் பெற்ற இரட்டை பதவி உயர்வை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழ்நாடு காவலர் பணிகள் விதிகளில் திருத்தம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : சென்னை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT