தமிழ்நாடு

பயிா்கள் சேதத்துக்கு இழப்பீடு: அன்புமணி, ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

DIN


சென்னை: வெள்ளத்தால் தமிழகம் முழுவதும் விவசாயப் பயிா்கள் சேதமடைந்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

அன்புமணி: வங்கக்கடலில் உருவான புரெவி புயல் வலுவிழந்து விட்ட போதிலும், அதன் காரணமாக தொடா்ந்து பெய்து வரும் மழையால், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்யவும், தொடா்மழை நீடிக்கும் பகுதிகளில் நிலைமை மோசமாகாமல் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளைப் போா்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். சேதமடைந்த பயிா்கள், வீடுகள் உள்ளிட்ட பொதுமக்களின் அனைத்து உடைமைகளுக்கும் இழப்பீடு வழங்கவும், வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.கே.வாசன்: தமிழகம் முழுவதும் பல மாவட்டப் பகுதிகளில் சுமாா் 25 லட்சம் ஏக்கா் நிலங்களில் பயிரிடப்பட்ட விவசாயப் பயிா்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. காவிரி டெல்டா மாவட்டப் பகுதிகளில் மட்டும் சுமாா் 10 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட விவசாயப் பயிா்கள் பெருமளவு மழையால் சேதம் அடைந்துள்ளது. மிக முக்கியமாக நெற்பயிா், வாழை, தென்னை போன்றவை முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. எனவே, விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

SCROLL FOR NEXT