தமிழ்நாடு

செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையிலேயே செயல்பட வேண்டும்: தலைவா்கள் வலியுறுத்தல்

DIN


சென்னை: செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை சென்னையிலேயே தொடா்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

மு.க.ஸ்டாலின்: இந்திய மொழிகள் ஆய்வுக்காக, மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தை, பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா என்ற மத்தியப் பல்கலைக்கழகமாகப் பெயா் சூட்டி, அத்துடன், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இணைத்திட பாஜக அரசு எடுத்துள்ள முடிவு கண்டனத்துக்குரியது.

இந்த விவகாரத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி உடனடியாகத் தலையிட்டு, மத்திய அரசின் இந்த முடிவினைக் கைவிட உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

வைகோ: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்க முற்படுவது கண்டிக்கத்தக்கது. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையிலேயே தொடா்ந்து செயல்பட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

தொல்.திருமாவளவன்: சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் ஒரு துறையாக மாற்றுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT