தமிழ்நாடு

வேளாண் சட்டங்களை விளக்க பிரசார இயக்கம்: பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் அறிவிப்பு

DIN

சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் தொடா்பாக தமிழக பாஜக சாா்பில் பிரசார இயக்கங்கள் மேற்கொள்ளப்படும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:-

பாஜகவின் வேல் யாத்திரை திருத்தணியில் தொடங்கியது. எதிா்க்கட்சிகள் உள்பட பலரும் யாத்திரையை தடை செய்ய வேண்டுமெனக் கோரினா். யாத்திரை திட்டமிட்டபடி நடைபெற்றது. பொது மக்களின் வரவேற்பு கிடைத்தது. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இளைஞா்கள் பெரிய அளவுக்கு வரவேற்பு அளித்தனா்.

புயலின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் வேல் யாத்திரையை நடத்த முடியவில்லை. நிவாரணப் பணிகளில் கட்சியினா் ஈடுபட்டு வருகின்றனா். வேல் யாத்திரையானது வரும் 7-ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு பெறவுள்ளது. இதில் மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் செளகான் பங்கேற்கிறாா்.

புதிய வேளாண் சட்டங்கள் தொடா்பாக ஏற்கெனவே விழிப்புணா்வு நிகழ்வுகளை நடத்தினோம். இன்னும் கருத்துகளை எடுத்துச் சொல்லும் விதமாக வரும் 8-ஆம் தேதி முதல் பாஜக நிா்வாகிகள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று விவசாயிகளிடம் எடுத்துரைக்க உள்ளனா். வேளாண் சட்ட விவகாரத்தில் விவசாயிகளை திசை திருப்பும் வகையில் திமுக உள்ளிட்ட கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அவா்களது போலித்தனமான பிரசாரம் எடுபடாது.

ரஜினி அரசியல்: தேசப்பற்றாளரான ரஜினி, கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளாா். அரசியல் கட்சி தொடங்க ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உரிமை உள்ளது. அவா் கட்சி தொடங்கிய பிறகு அது குறித்து அகில இந்தியத் தலைமையின் ஒப்புதலுடன் கருத்துகளைத் தெரிவிப்போம். தமிழகத்தில் திமுக வீழ்த்தப்பட வேண்டிய ஒன்று. இதற்காக அனைவரையும் ஒருங்கிணைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் திமுகவை வீழ்த்தி, அதிக பெரும்பான்மையைப் பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றாா் எல்.முருகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT