தமிழ்நாடு

சிவகாசி பகுதியில் குறைவான ஊதியத்தில் வேலை பார்த்த வடமாநில தொழிலாளர்கள் 33 பேர் மீட்பு 

DIN

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் தொழிற்சாலைகளில் குறைவான ஊதியத்தில் வேலை பார்த்த வடமாநில தொழிலாளர்கள் 33 பேர் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டு சனிக்கிழமை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில் உள்ள அச்சு ஆலை, பட்டாசு ஆலை உள்ளிட்டவைகளில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் சொந்த மாநிலங்களிலிருந்து இடைத்தரகர் மூலம் இங்கு வேலைக்கு சேர்கிறார்கள். இவர்களுக்கான ஊதியத்தை ஆலை உரிமையாளர்கள் இடைத்தரகர்களிடம் வழங்குவர், இடைத்தரகர்கள் தொழிலாளர்களிடம் வழங்குவார்கள்.

இந்நிலையில், சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் குமார் யாதவ்(30) அந்த மாநிலத்தில் இருந்து 30 பேரை சிவகாசிக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது ஆண்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் பெண்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரமும் ஊதியம் வழங்கப்படும் என அவர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் அனைவரும் பல தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் பேசியபடி சுனில் யாதவ் ஊதியம் வழங்கவில்லை. ஆண்களுக்கு மாதம் ரூ.6000, பெண்களுக்கு மாதம் ரூ. 4,500 ஊதியமாக வழங்கியுள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட அவர்கள் தங்களது கைபேசியில் குறுஞ்செய்தியாக தங்களது நிலை குறித்து பலருக்கு அனுப்பியுள்ளனர். இந்த தகவல் விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் செயலாளர் மாரியப்பனுக்கு கிடைத்தது. இதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ முத்து சாரதா உத்தரவின் பேரில், சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் கல்யாணம் மாரிமுத்து, குற்றவியல் நீதித்துறை நடுவர் சந்தனகுமார், சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார், திருத்தங்கள் காவல் ஆய்வாளர் ராஜா, ஆள் கடத்தல் பிரிவு சார்பு ஆய்வாளர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் சுக்கிரவார பெட்டி, எம் புதுப்பட்டி ,காளையார் குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வெள்ளிக்கிழமை மாலை சுமார் 3 மணி அளவில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு இரவு 10 மணி வரை நீடித்தது. ஆய்வில் தொழிற்சாலை உரிமையாளர்கள் உரிய ஊதியம் வழங்கி விடுவதாகவும், இடைத்தரகர் சுனில் யாதவ் தொழிலாளர்களின் ஊதியத்தில் பாதியை எடுத்துக் கொண்டு வழங்கியது தெரியவந்ததை தொடர்ந்து 20 குழந்தைகள் உள்பட 33 பேரை மீட்டு சார்ஜா பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். சுனில் குமார் யாதவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 
இதுகுறித்து யாரும் புகார் அளித்ததால் போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. மேற்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் மதுரையில் இருந்து தனியார் பேருந்து வரவழைக்கப்பட்டு சனிக்கிழமை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT