தமிழ்நாடு

வெங்கல் ஏரி நிரம்பியது: பெரியபாளையம் - திருவள்ளூர் சாலையில் ஓடும் வெள்ளம்

4th Dec 2020 05:53 PM

ADVERTISEMENT

 

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே  வெங்கல் ஏரி கனமழையால் நிரம்பி பெரியபாளையம் - திருவள்ளூர் சாலை செல்லும் நெடுஞ்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்தச் சாலையில் வெள்ள நீர் ஓடுவதால் ஆபத்தான முறையில் வாகனங்கள் சென்று வருகின்றன. மழை மேலும் நீடிக்கும் என்பதால் சாலையில் தண்ணீர் இன்னும் அதிக அளவு பெருக்கெடுத்த ஓட வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

மேலும் நெற்ப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT