தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் காணாமல் போன 3 சிறுமிகள் சடலமாக மீட்பு

4th Dec 2020 05:50 PM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரத்தில் பாலாற்றில் வியாழக்கிழமை குளிக்கச் சென்ற சகோதரிகள் இருவர உட்பட 3 சிறுமியர்கள் காணாமல் போன நிலையில் அவர்களை தீயணைப்புத்துறையினர் தேடி சடலமாக வெள்ளிக்கிழமை மீட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் அருகே தும்பவனம் பகுதியை சேர்ந்த சம்பத்தின் மகள்களான ஜெயஸ்ரீ(15) இவரது தங்கை சுபஸ்ரீ(14) மற்றும் அதேப் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகள் பூரணி(17) இவர்கள் மூவரும் காஞ்சிபுரம் அருகேயுள்ள குருவிமலை பகுதியில் பாலாற்றில் வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்த போது காணாமல் போயினர்.

இத்தகவல் காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் பாலாற்றில் வியாழக்கிழமை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மூவரின் சடலங்களும் குருவிமலை ஆற்றங்கரைப் பகுதியிலியே வெள்ளிக்கிழமை சடலமாக மிதந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சகோதரிகள் இருவர் உள்பட 3 சிறுமியரின் சடலங்களும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களது குடும்பத்தினர்களிடம் காவலர்கள் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பாக மாகறல் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT