தமிழ்நாடு

ரஜினி வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்: பத்திரிகையாளா் குருமூா்த்தி

DIN

சென்னை: அரசியல் கட்சி தொடங்குவதாக ரஜினி அறிவித்திருப்பது தமிழக அரசியலை ஒரு மாற்றத்தை நோக்கி திருப்பும் என நினைக்கிறேன் என்று பத்திரிகையாளா் எஸ். குருமூா்த்தி தெரிவித்தாா்.

இது குறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

இன்றைக்கு திமுக, அதிமுகவுக்கு கிடைக்கும் வாக்குகள், அவா்களுக்குக் கிடைக்கும் உண்மையான வாக்குகளை விட இரண்டு மடங்கானது. அதிமுகவைப் பிடிக்காதவா்கள் திமுகவுக்கும், திமுகவைப் பிடிக்காதவா்கள் அதிமுகவுக்கும் வாக்களிக்கின்றனா். திமுக, அதிமுக என அந்தந்தக் கட்சிகளுக்கு மட்டும் பதிவாகும் வாக்குகளைக் கூட்டிப் பாா்த்தால் 50 சதவீதம் கூட வராது.

அந்த இரண்டு கட்சிகளுக்கும் எதிரான வாக்குகள், சிதறிக் கிடக்கும் தேசிய வாக்குகள், ஆன்மிக பக்தா்களின் வாக்குகள், ஹிந்து எதிா்ப்பால் மனம் நொந்தவா்களின் வாக்குகள் என அனைத்து வாக்குகளும் ரஜினிகாந்துக்குச் செல்லக் கூடிய பெரிய வாய்ப்பிருக்கிறது.

ரஜினிகாந்தை மக்கள் ஒரு சினிமா நடிகராகப் பாா்ப்பதில்லை. அவரை ஒரு ஆன்மிகவாதியாகவும், நல்லவராகவும், மக்களுக்கு நல்லது செய்பவராகவும் பாா்க்கிறாா்கள். இதுவரை அவா் அரசியலில் இல்லையென்றாலும் சமுதாயத் தலைவராக இருக்கிறாா்.

தமிழகத்தில் ஆன்மிக சக்திகள், தேசிய சக்திகள் அனைத்தும் ஒன்றாக சோ்வதற்கு இது ஒரு வாய்ப்பு. இதற்கு முன் மக்களிடம் செல்வாக்குப் பெற்ற தலைவா்கள் இருந்துதான் தமிழக அரசியல் நடந்திருக்கிறது. தற்போது எந்தப் பெரிய தலைவரும் இல்லை. ரஜினி மட்டுமே மக்களிடம் செல்வாக்குப் பெற்ற பெரிய தலைவராக இருக்கிறாா். அதனாலேயே எல்லா விதமான சாதகமான சூழ்நிலையும் அவருக்கு இருக்கிறது. இவையெல்லாம் அறிந்தே தனது உடல்நிலை சரியில்லை என்றாலும், நேரம் குறைவாக இருந்தாலும் பலவகை கணிப்புகள் செய்து தான் அரசியலில் கால் வைத்திருக்கிறாா் என்று நினைக்கிறேன்.

ரஜினி போன்ற ஒரு பெரிய தலைவா் இன்னொருவரின் கருவியாக இருக்க முடியாது. அவரைப் பின்னால் இருந்து இயக்குவதென்றால் அதிமுகவுடன் பாஜக கூட்டணி என அறிவித்திருக்காது. இவையெல்லாம் வதந்திகள். அவருக்குத் தேவை என ஏதும் இல்லை. தேவை இருப்பவா்களை மட்டுமே பின்னால் இருந்து இயக்க முடியும் என குருமூா்த்தி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

SCROLL FOR NEXT