தமிழ்நாடு

கொட்டும் மழையில் தலைமை அஞ்சலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முற்றுகை

DIN

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, மன்னார்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்,தலைமை அஞ்சலகத்தை, கொட்டும் மழையில் முற்றுகையிடும் போராட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்.இக் கோரிக்கையை வலியுறுத்தி புதுதில்லியில் போராட்டும் விவசாயிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தக் கூடாது.போராடும் விவசாய அமைப்புகளுக்குடன் மத்திய அரசு நிபந்தனை விதிக்காமல் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும்.

ஆகிய, கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி மேலராஜவீதியில் உள்ள தலைமை அஞ்சலம் முற்றுகைப் போராட்டத்திற்கு,சிபிஎம் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமை வகித்தார்.

மன்னார்குடி நகரச் செயலர் எஸ்.ஆறுமுகம்,ஒன்றியச்செயலர்கள் எம்.திருஞானம்(மன்னார்குடி),சோம்.ராஜமாணிக்கம்(நீடாமங்கலம்),என்.ராதா(வலங்கைமான்),எல்.சண்முகவேல்(கோட்டூர்) முன்னிலை வகித்தனர்.

இதில்,100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு,மஸ்தான்பள்ளிதெருவில் உள்ள சிபிஎம் ஒன்றிய அலுவலகத்திலிருந்து,கொட்டும் மழையில் ஊர்வலமாக, தலைமை அஞ்சலகத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

SCROLL FOR NEXT