தமிழ்நாடு

சிவகங்கையில் ரூ.27.46 கோடி மதிப்பீட்டில் 30 புதிய பணிகளுக்கு அடிக்கல்

DIN

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ரூ. 27.46 கோடி மதிப்பீட்டில் 30 புதிய பணிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.

சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  வெள்ளிக்கிழமை வருகை தந்தார். 

மதுரையில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி,  விரகனூர் சுற்றுச்சாலை, மணலூர், பூவந்தி, படமாத்தூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சாலை மார்க்கமாக சிவகங்கைக்கு வந்தார். அவருக்கு வழி நெடுகிலும் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் ஊரக வளர்ச்சி, பேரூராட்சிகள், மக்கள் நல்வாழ்வு, நெடுஞ்சாலை,  உயர்கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரூ. 27.46 கோடி மதிப்பில் 30 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், ரூ. 36.43 கோடி மதிப்பில் நிறைவு பெற்ற 27 திட்டங்களை தொடங்கி வைத்தார். 

அதைத் தொடர்ந்து,ரூ.29.33 கோடி மதிப்பில் 7, 457 பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது, மாநில  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்,தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் க. பாஸ்கரன்,  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி. மதுசூதன் ரெட்டி, மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT