தமிழ்நாடு

குமுளி மலைச்சாலையில் 10 இடங்களில் குவிந்த கண்ணாடி பொருத்தம்

4th Dec 2020 06:09 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து காவல்துறை சார்பில் குமுளி மலைச்சாலை வளைவுகளில் வாகன விபத்தைத் தடுக்கும் வகையில் பக்கவாட்டு மற்றும் எதிரெதிர் திசைகளில் வரும் வாகனங்களைக் காட்டும் கான்வெக்ஸ் மிர்ரர் குவிந்த கண்ணாடி 10 இடங்களில் பொருத்தப்பட்டது. 

தேசிய நெடுஞ்சாலைகளில் முச்சந்திப்பு, நாற்சந்திப்பு மற்றும் மலைச்சாலையில் வரும் வாகனங்கள் விபத்து ஏற்படாத வகையில், பக்கவாட்டு மற்றும் எதிரெதிர் திசைகளில் வரும் வாகனங்களைக் காட்டும் வகையில் “கான்வெக்ஸ் மிர்ரர் (குவிந்த கண்ணாடி) அமைப்பது வழக்கம். 

தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு, ஹைவேவிஸ் மலைச்சாலைகளிலும், தேனி மாவட்ட நெடுஞ்சாலையின் முக்கிய நான்கு இடங்களிலும் என இருபது இடங்களில் இந்த குவிந்த கண்ணாடியை அமைக்கப்பட்டது.

ADVERTISEMENT

குமுளி மலைச்சாலையில் 6 கிலோமீட்டர் தொலைவுக்குள், மாதாகோவில் வளைவு, எஸ் வளைவுக்குக் கீழ் உள்ள வளைவு, லீக்கேஜ் பால்ஸ் பெண்டு, இறைச்சல்பாலம் மேல்வளைவு என நான்கு இடங்களில் மட்டுமே இந்த கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது, இந்நிலையில் தற்போது கம்பம் போக்குவரத்து காவல்துறை சார்பாக மேலும் ஆறு இடங்கள் என 10 இடங்களில் இந்த கண்ணாடி அமைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சணாமூர்த்தி கூறுகையில், இந்த கண்ணாடி மூலம் வளைவுகளில் வரும் வானங்களைக் கண்டு, விபத்துக்களைத் தவிர்க்க முடியும் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT