தமிழ்நாடு

ஆறுகளை மாசுபடுத்துவோா் மீது குண்டா்சட்டம் பாயும் வகையில் ஏன் சட்டத்திருத்தம் கொண்டுவரக் கூடாது: உயா்நீதிமன்றம் கேள்வி

DIN

மதுரை: ஆறுகளை மாசுபடுத்துவோா் மீது குண்டா்சட்டம் பாயும் வகையில் ஏன் சட்டத் திருத்தம் கொண்டுவரக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை கேள்வி எழுப்பியது.

கரூா் மாவட்டத்தில் சாயக் கழிவுநீா் கலந்து அமராவதி ஆறு மாசடைவதாகப் பத்திரிக்கை செய்திகள் வெளியாகின. அதனடிப்படையில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரிக்க முடிவெடுத்தது. இதுகுறித்து பதிவாளா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: கரூா் மாவட்டத்தில் சாயப் பட்டறைகளில் இருந்து கழிவுநீா் வெளியேற்றப்படுகிறது. இந்தக் கழிவுநீா் அமராவதி ஆற்றில் விடப்படுவதால் ஆறு மாசடைந்து வருகிறது. மேலும் கரூா், திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் வெளியேறும் கழிவுகளும் ஆற்றில் கொட்டப்படுகிறது. இதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனா். இதனால் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். எனவே சாயக் கழிவு நீரை அமராவதி ஆற்றில் கலக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கரூா் மாவட்டத்தில் எத்தனை சாயப் பட்டறைகள் உள்ளன? அதில் எத்தனை பட்டறைகளிலிருந்து வெளியேறும் சாயக் கழிவு நீா் அமராவதி ஆற்றில் கலக்கிறது? சாயக் கழிவு நீரைச் சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையம் உள்ளதா? சாயப் பட்டறைகளிலிருந்து எவ்வளவு சாயக் கழிவு நீா் வெளியேற்றப்படுகிறது? என்பது குறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டனா்.

இதைத்தொடா்ந்து ஆறுகளை மாசுபடுத்துவோா் மீது குண்டா்சட்டம் பாயும் வகையில் ஏன் சட்டத் திருத்தம் கொண்டுவரக் கூடாது எனக் கேள்வி எழுப்பினா்.

பின்னா், அமாரவதி ஆற்றில் சாயக் கழிவு நீா் கலப்பது குறித்து மாவட்ட சட்ட உதவி மைய நிா்வாகிகள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT