தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் கடல் சீற்றம்: படகுகளை கரையில் நிறுத்திய மீனவர்கள்

DIN


விழுப்புரம் மாவட்டத்தில் புரெவி புயல் சீற்றம் காரணமாக மீனவர்கள் தங்கள் படகுகளை கரையோரமாக பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளனர். 

விழுப்புரம் மாவட்டத்தில் புரெவி புயல் தாக்கம் காரணமாக புதன்கிழமை மாலையில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக கடலோரப் பகுதியான மரக்காணம் தொடங்கி புதுவை அருகே உள்ள கோட்டகுப்பம் வரை, இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

புதன்கிழமை முதல் கடல் சீற்றம் காரணமாக கடல் அலை உயர்ந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள 19 மீனவ கிராமத்தில் இருந்து புதன்கிழமை முதல் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

வியாழக்கிழமையும் சீற்றம் தொடர்ந்ததால் மீனவர்கள் மரக்காணம் அருகே எக்யர்குப்பம், சின்ன முதலியார் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தங்கள் படகுகளை கரையோரமாக பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT