தமிழ்நாடு

பவானியில் 730 பயனாளிகளுக்கு ரூ.85.48 லட்சம் நலத்திட்ட உதவிகள்

DIN

பவானி: பவானி சட்டப்பேரவை தொகுதியில் 730 பயனாளிகளுக்கு ரூ.85.48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, கோபி கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ், பவானி ஒன்றிய குழுத்தலைவர் பூங்கோதை வரதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பவானி வட்டாட்சியர் கு.பெரியசாமி வரவேற்றார்.

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், பவானி தொகுதியை சேர்ந்த 359 பேருக்கு முதியோர் உதவித்தொகை,  146 பேருக்கு விதவை உதவித்தொகை, மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா, மின்னணு குடும்ப அட்டைகள் உள்பட 730 பயனாளிகளுக்கு ரூ.85.48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியக் குழு உறுப்பினர் கே.தட்சிணாமூர்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினர் குப்புசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT