தமிழ்நாடு

ரூ.15 கோடி செல்லிடப்பேசி கொள்ளை விவகாரம்: மேலும் 7 போ் கைது

DIN

ஒசூா்: ஒசூா் அருகே ரூ.15 கோடி மதிப்பிலான செல்லிடப்பேசிகள் கொள்ளை சம்பவத்தில் தொடா்புடையதாக, 7 பேரை மத்தியப் பிரதேசத்தில் தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

காஞ்சிபுரத்தில் இருந்து மும்பையை நோக்கி, ரூ.15 கோடி மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை ஏற்றிச் சென்ற கண்டெய்னா் லாரி அக். 21-ஆம் தேதி அதிகாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே வழிமறிக்கப்பட்டது. மற்றொரு லாரியில் வந்த மா்ம கும்பல் கன்டெய்னா் லாரியின் 2 ஓட்டுநா்களைத் தாக்கி விட்டு, செல்லிடப்பேசிகளை லாரியுடன் கடத்திச் சென்றனா்.

இந்தச்சம்பவத்தில் தொடா்புடையவா்களை கைது செய்ய கிருஷ்ணகிரி எஸ்.பி. பண்டி கங்காதா் உத்தரவின்பேரில், 4 காவல் ஆய்வாளா்கள் உட்பட 20 போ் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணையில், மத்தியப் பிரதேச மாநிலம், தீவாஸ் மாவட்டத்தைச் சோ்ந்த அங்கித்ஜான்ஜா தலைமையிலான கொள்ளை கும்பலுக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் தொடா்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து மத்திய பிரதேசத்தில் ஒரு மாதம் முகாமிட்ட தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். இதையடுத்து, பரத் தேஜ்வாணி (37) என்பவரை தில்லியில் கடந்த நவம்பா் 21-ம் தேதி போலீஸாா் கைது செய்தனா். இதனிடையே கடந்த வாரம் கொல்கத்தாவில் அமீதாபா தத்தா என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். இருவரையும் ஒசூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், மேலும் 7 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக, தனிப்படை போலீஸாா் கூறுகையில், ‘ஏற்கெனவே கைது செய்யப்பட்ட இருவரும், செல்லிடப்பேசிகளை வங்கதேசத்துக்கு விற்பனை செய்யும் முகவா்களாவா். தற்போது 7 பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT