தமிழ்நாடு

பெரிய ஓபுளாபுரத்தில் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளம்

DIN

பெரிய ஓபுளாபுரத்தில் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரிதும் அவதியுற்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் காலனி அடுத்த ஈச்சங்காட்டு மேடு பகுதியில் 150 வீடுகள் உள்ளது.

இப்பகுதியில் ஓடை புறம்போக்கு நிலத்தை அப்பகுதியை சேர்ந்த எம்டிஎஸ் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்ததால் ஈச்சங்காட்டு மேடு பகுதியில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் ஈச்சங்காட்டுமேடு பகுதியில் 150 வீடுகளை சேர்ந்த மக்கள் இதனால் பெரிதும் அவதியுற்றனர்.

அது மட்டுல்லாமல் பெரியஓபுளாபுரம் காலனி- ஈச்சங்காட்டு மேடு சாலையை மழை வெள்ளம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அந்த சாலை வழியே செல்ல பெரிதும் சிரமப்படுகின்றனர்.

இது குறித்து பெரியஓபுளாபுரம் பாமக ஒன்றிய கவுன்சிலர் மணிமேகலை கேசவன் கும்மிடிப்பூண்டி  வட்டாட்சியர் கதிர்வேலிடம் புகார் அளித்துள்ளார்.

அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை தண்ணீர் குடியிருப்புகளை  விட்டு வெளியே செல்வதற்கு வழிவகை செய்ய வட்டாட்சியர் கதிர்வேல் உறுதியளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

400 தொகுதிகளில் வென்று மோடி மீண்டும் பிரதமராவாா் -நயினாா் நாகேந்திரன்

கோவையில் இன்று கனிமொழி பிரசாரம்

வன்கொடுமை வழக்கு: 8 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

அண்ணாமலையின் பிரமாணப் பத்திரம் அதிகாரிகள் உதவியுடன் மாற்றம்! -பரபரப்பு குற்றச்சாட்டு

நாகை மக்களவைத் தொகுதி: 10 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT