தமிழ்நாடு

ஜனவரியில் புதிய கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு

DIN


சென்னை: ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சித் தொடங்கப் போவதாகவும், அதற்கான தேதியை டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்க இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

ரஜினி ரசிகர்கள் அனைவரும் அதிகம் எதிர்பார்த்திருந்த அந்த அறிவிப்பு இன்று வெளியாகிவிட்டது. 

தமிழகத்தில் வரும் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்று தெரிவித்திருக்கும் ரஜினிகாந்த், 'மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம்' என்றும், 'இப்போ இல்லேன்னா எப்பவும் இல்லை' என்ற ஹேஷ் டேக்குகளையும் உருவாக்கியுள்ளார்.

ரஜினி தனது சுட்டுரைப் பக்கத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது, 


ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. 


வரப்போகிற சட்டப்பேரவைத்  தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம்.


அற்புதம்.. அதிசயம்.. நிகழும்!!! என்று பதிவிட்டுள்ளார்.

முன்பு இதுபற்றி என்ன சொல்லியிருக்கிறார்.. அரசியல் முடிவை விரைவில் அறிவிப்பேன்: ரஜினி

புதிய கட்சித் தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதாக, கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பை வெளியிட்டிருந்தார் நடிகர் ரஜினிகாந்த். சரியாக 3 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அரசியல் கட்சி தொடங்கயிருப்பதாகவும் அதற்கான தேதி ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், மாநாடு நடத்தி அல்லது தனது மக்கள் மன்ற நிர்வாகிகள் முன்னிலையில் அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, ரஜினி ரசிகர் மன்றங்களை எல்லாம் மக்கள் மன்றமாக மாற்றி தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து, அரசியல் பணிகளைத் தொடங்கியிருந்தார் ரஜினிகாந்த்.

கடந்த வாரம், மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து, அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்திய ரஜினி, எவ்வளவு விரைவாக அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ரஜினியின் உடல்நிலை குறித்தும் அதனால் தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாகவும் சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரவியது. அதுபற்றி விளக்கம் அளித்திருந்த ரஜினி, அதில் இருக்கும் கருத்துகள் அனைத்தும் உண்மையே, ஆனால் அந்த கடிதம் உண்மையல்ல என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

இதனால், ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் மீம்ஸ்களும் அதிகம் கிளம்பின. எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்று ஒரு முக்கிய அறிவிப்பை ரஜினி வெளியிட்டுள்ளார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த போது, பலரும் அதனை வரவேற்றிருந்தனர்.நடிகரும் மநீம நிறுவனருமான கமல் அதனை வரவேற்று வெளியிட்ட சுட்டுரைப் பதிவுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்திருந்தார்.


தனது புதிய அரசியல் கட்சி அறிவிப்புக்குப் பிறகு போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது அவர் பேசுகையில், ரஜினி மக்கள் மன்றத்தின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்ப்பட்டுள்ளதாக அறிவித்தார். கரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் என்னால் சுற்றுப் பயணம் மேற்கொள்ளமுடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பான மேலதிகச் செய்தி.. பாஜகவிலிருந்து விலகினார் ரஜினி கட்சி ஒருங்கிணைப்பாளர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT