தமிழ்நாடு

நாளை மதியம் வரை மதுரை விமான நிலையம் மூடல்

3rd Dec 2020 10:09 PM

ADVERTISEMENT

கனமழை காரணமாக நாளை மதியம் 12 மணி வரை மதுரை விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த புரெவி புயல் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவுக்கு மேல் பாம்பன் - கன்னியாகுமரி இடையே தமிழக கடற்கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

பாம்பன் அருகே 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த புயல் வலுவிழந்து தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. புயல் வலுவிழந்தாலும் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கனமழை காரணமாக நாளை காலை முதல் மதியம் 12 மணி வரை மதுரை விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார். அதேவேளையில், காற்றின் வேகத்தை பொறுத்து வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் தரையிறக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT


 

Tags : madurai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT