தமிழ்நாடு

வெள்ளத்தில் லாரியோடு அடித்துச் சென்ற 5 பேரை மீட்ட எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சி தலைவரின் கணவர்

3rd Dec 2020 06:05 PM

ADVERTISEMENT

 

கும்மிடிப்பூண்டி அடுத்த எஸ்.ஆர்.கண்டிகை டி.ஆர்.பி நகரில் பலத்த மழை  வெள்ளம் காரணமாக கால்வாயில் ஏரி போல மழை நீர் ஓடியது.

இந்நிலையில் அப்பகுதியை கடக்க முயன்ற சேப் பேக்கேஜ் என்கிற அட்டை தொழிற்சாலையின்   மினி லாரியில் டிரைவர் உள்ளிட்ட 5 பேர் லாரியோடு 500 மீட்டர் அடித்து சென்றனர். மினி லாரி மழை வெள்ளத்தில் அடித்து சென்றதும் 5 பேரும் லாரியில் இருந்து கால்வாயில் குதித்தனர். அதில் ஒருவர் அங்கிருந்த மரத்தை பிடித்துக் கொண்டார். மற்ற நால்வரும் லாரியின் மேல் ஏறி நின்று கொண்டனர்.

இது குறித்து அறிந்து எஸ்.ஆர்.கண்டிகை முன்னாள் ஊராட்சி முன்னாள் துணை தலைவரும், தற்போதைய ஊராட்சி தலைவரான ரேணுகா முரளியின் கணவர் சி.எம். முரளி, எஸ்.ஆர்.கண்டிகையை சேர்ந்த எம்.டி.சி.சுகுமார், முனிரத்தினம், விக்னேஷ், ஜெ.சுரேஷ் ஆகியோரோடு சேர்ந்து மழை வெள்ளத்தில் சிக்கிய 5 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து சி.எம்.ஆர். முரளி பெரிய கயிற்றை வீசி லாரியில் ஏறி நின்றவர்களை ஒருவர் பின் ஒருவராக மீட்டார். மரத்தின் கிளையைப் பிடித்து நின்றவரையும் அவருடன் வந்தவர்கள் காப்பாற்றினர்.

சம்பவம் குறித்து அறிந்த கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிந்து(22), சப்ஜி(23), செஞ்சியை சேர்ந்த சிவா(22), லாரி டிரைவர், ஆனந்தன்(55), திருவண்ணாமலையை சேர்ந்த அப்சர் (23) ஆகியோரை சந்தித்து  அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.

மழை வெள்ளத்தில் சிக்கிய 5 பேரை தீயணைப்பு துறையினர் வருவதற்குள் துரிதமாக மீட்ட எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சி தலைவரின் கணவர் சி.எம்.முரளியை கும்மிடிப்பூண்டி பகுதி மக்களும், அதிகாரிகளும் வெகுவாக பாராட்டினர்.
 

Tags : cyclone heavy rain
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT