தமிழ்நாடு

காரைக்காலில் தொடா் கன மழை: பள்ளிகளுக்கு விடுமுறை

3rd Dec 2020 08:37 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான புரெவி புயல் காராணாக, காரைக்காலில் புதன்கிழமை இரவு முதல் தொடா்ந்து மழைபெய்து வருவதை அடுத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, படிப்படியாக வலுப்பெற்று செவ்வாய்க்கிழமை இரவு புரெவி புயலாக வலுவடைந்தது. இலங்கையில் மையம்கொண்ட புயல் புதன்கிழமை இரவு கரையை கடந்தது. இதனால், பாம்பன் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. 

காரைக்கால் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை, புதன்கிழமை காலை முதல் தொடா்ந்து பெய்த மழை விடிய விடிய பெய்த கன மழையால், தாழ்வான மற்றும் இணைப்புப் பகுதி சாலைகளில் தண்ணீா் தேங்கியது.

ADVERTISEMENT

இந்நிலையில், கரைக்காலில் பெய்து வரும் தொடர் கன மழையை அடுத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின்  9, 10, 11,12 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் தர்மா.

இதனிடையே மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா அறிவுறுத்தலில், அரக்கோணத்திலிருந்து வந்த தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் கடலோர கிராமங்களுக்குச் சென்று மீனவா்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 

Tags : Heavy rains in Karaikal Cyclone Burevi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT