ரஜினியின் அரசியல் வருகையால் பாஜகவில் குழப்பம் ஏற்படும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சித் தொடங்கப் போவதாகவும், கட்சி தொடங்கப்படும் தேதி டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ரஜினியின் அரசியல் வருகை குறித்த இந்த அறிவிப்புக்கு வரவேற்பும், விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, ரஜினியின் அரசியல் வருகை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'ரஜினியின் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது முடிவுக்கு வந்துவிட்டது. அநேகமாக ரஜினிகாந்திற்கும் சசிகலாவிற்கும் இடையில் போட்டி இருக்கும். பாஜகவில் குழப்பம் ஏற்படும்' என்று பதிவிட்டுள்ளார்.
ADVERTISEMENT