தமிழ்நாடு

மீண்டும் 37 ஆயிரத்தைத் தாண்டியது ஒரு சவரன் தங்கம்

DIN

சென்னையில் கடந்த எட்டு நாள்களாக தொடர்ந்து ரூ.36 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலையானது இன்று மீண்டும் 37 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையாகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தங்கத்தின் விலை குறைந்து வந்தது.

இந்நிலையில், டிச.3-ம் தேதி வியாழக்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.240 உயா்ந்து, ரூ.37,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.30 உயா்ந்து, ரூ.4,641 ஆக உள்ளது. 

அதேசமயம், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.40 காசுகள் குறைந்து, ரூ.67.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து, ரூ.67,300 ஆகவும் விற்பனையாகிறது. 

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,641

1 சவரன் தங்கம்...............................37,128

1 கிராம் வெள்ளி.............................67.30

1 கிலோ வெள்ளி.............................67,300

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,611

1 சவரன் தங்கம்...............................36,888

1 கிராம் வெள்ளி.............................67.70

1 கிலோ வெள்ளி.............................67,700
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

SCROLL FOR NEXT