தமிழ்நாடு

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

DIN


புதுதில்லி: தெற்கு அந்தமான் பகுதியில் நாளை மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, படிப்படியாக வலுப்பெற்று செவ்வாய்க்கிழமை இரவு புரெவி புயலாக வலுவடைந்தது.

இலங்கையில் மையம்கொண்ட புயல் புதன்கிழமை இரவு கரையை கடந்த நிலையில், பலத்த காற்றுடன் பாம்பனை நெருங்கி வரும் புரெவி புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளது. 

இந்நிலையில், மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நிவர், புரெவி என 1 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகிள் புயலாக மாறிய நிலையில் மேலும் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை (டிச.4) மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

SCROLL FOR NEXT