தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் 1.19 கிலோ தங்கம் பறிமுதல்

DIN

சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில், 1.19 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.59.85 லட்சம்.

துபையில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

துபையில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பயணிகள் இருக்கை ஒன்றின் அடியில், துணிப்பை ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் சுமார் 6 தங்க துண்டுகள் 1 கிலோ எடையில் இருந்தன. இதன் மதிப்பு ரூ.50 லட்சம். இதை யாரும் உரிமை கோரவில்லை.

பிளை துபாய் விமானத்தில் வந்த வேலூரைச் சேர்ந்த விவேக் மனோகரன் (30) என்ற பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர் அணிந்திருந்த காலணியில் 199 கிராம் எடையில், தங்கத் துண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு 9.85 லட்சம்.

நேற்று மொத்தம் 1.19 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.59.85 லட்சம். இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடப்பதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்க்சிஸ்ட் கட்சி கலைக் குழுவினா் பிரசாரம்

ஊழலை ஒழிக்கவே தனித்துப் போட்டி: சீமான்

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

SCROLL FOR NEXT