தமிழ்நாடு

மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம் 

DIN

மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.3 ஆயிரமாகவழங்க வேண்டும். கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

அரசுத் துறையில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை மூன்று மாத காலத்தில் அறிவித்து முழுமையாக நிரப்பிட வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கொளத்தூர் ஒன்றிய தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் முத்து, பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் திடீரென மேட்டூர் பேருந்து நிலையம் அருகே சென்று பஸ் மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகு சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து நேற்று போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT