தமிழ்நாடு

மருத்துவ படிப்புகளுக்கு தேர்வான 4 அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

DIN


திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து மருத்துவ படிப்புகளுக்கு தேர்வான 4  மாணவிகளை திமுக சார்பில் பாராட்டி அவர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது. 

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த டி.கிருத்திகா, எஸ்.விஜயலட்சுமி, ஆர்.அருந்ததி எம்பிபிஎஸ் படிப்பிற்கும், வி.வெண்ணிலா பிடிஎஸ் படிப்பிற்கும் தேர்வானார்கள்.

இதில் டி.கிருத்திகா சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியிலும், எஸ்.விஜயலட்சுமி சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியிலும், ஆர்.அருந்ததி திருவள்ளூர் இந்திரா மருத்துவ கல்லூரியிலும் எம்பிபிஎஸ் படிக்க கலந்தாய்வில் தேர்வானார்கள். மாணவி வி.வெண்ணிலா திருவள்ளூர் பிரியதர்ஷினி மருத்துவ கல்லூரியில் பிடிஎஸ் படிக்க தேர்வானார்.

இதனை ஒட்டி இந்த மாணவிகளை பாராட்டி அவர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு விழா திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ. கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்விற்கு திமுக செயற்குழு உறுப்பினர் ஜெயமூர்த்தி,  கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வழக்குரைஞர் மணி பாலன்,  கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் திருமலை, பாஸ்கர்,  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன், மீஞ்சூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முரளி, மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் வெற்றி என்கிற ராஜேஷ், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன், மெய்யழகன் , ராகவரெட்டிமேடு ரமேஷ், பரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து  மருத்துவ படிப்புகளுக்கு தேர்வான 4 மாணவிகளையும் பாராட்டிய திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ. கோவிந்தராஜன் அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். மேலும் மருத்துவப் படிப்பில் எம்பிபிஎஸ் படிக்கும் மூன்று மாணவிகளுக்கு ஆண்டுதோறும் 25,000 என ஐந்து ஆண்டுகளுக்கும் பிடிஎஸ் படிக்கும் ஒரு மாணவிக்கு ஆண்டுதோறும் ரூ.20 ஆயிரம் என ஐந்து ஆண்டுகளுக்கும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வழங்கப்படும் என்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டிஜே கோவிந்தராஜன் அறிவித்தார்.

இந்நிகழ்வில் கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஐயப்பன் உதவி தலைமையாசிரியர் ஸ்ரீதேவி மற்றும் ஆசிரியர்கள் பக்கிரிசாமி, கனிமொழி, துரை ,செல்வமணி, ராம்குமார், சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே அரசு பள்ளியில் 4 மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தேர்வானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

SCROLL FOR NEXT