தமிழ்நாடு

9 சிறப்பு ரயில்களை இயக்க ஒப்புதல்

DIN

சென்னை எழும்பூா்-மன்னாா்குடி, கோயம்புத்தூா்-நாகா்கோவில் உள்பட 9 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றுக்கான முன்பதிவு புதன்கிழமை (டிச.2) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை-மன்னாா்குடி: சென்னையில் இருந்து தினமும் இரவு 10.15 மணிக்கு சிறப்பு ரயில் (06179) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.25 மணிக்கு மன்னாா்குடியை சென்றடையும். இந்த ரயில் சேவை டிச.8-இல் தொடங்குகிறது. மன்னாா்குடியில் இருந்து தினமும் இரவு 10.30 மணிக்கு சிறப்பு ரயில் (06180) புறப்பட்டு, மறுநாள் காலை 5.55 மணிக்கு சென்னையை வந்தடையும். இந்த ரயில் சேவை, டிச.9-இல் தொடங்குகிறது.

சென்னை-குருவாயூா்: சென்னையில் இருந்து தினமும் காலை 8.25-க்கு ரயில்(06127) புறப்பட்டு, மறுநாள் காலை 6.40-க்கு குருவாயூரை சென்றடையும். இந்த ரயிலின் முதல் சேவை டிச. 8-இல் தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, குருவாயூரில் இருந்து இரவு 9.30 மணிக்கு (எண்.06128) புறப்பட்டு, மறுநாள் இரவு 8.35 மணிக்கு சென்னையை வந்தடையும். இந்த ரயில் சேவை டிச.9-இல் தொடங்குகிறது.

சென்னை-ராமேசுவரம்: தினமும் இரவு 7.15-க்கு சென்னையில் இருந்து புறப்படும் (06851), மறுநாள் காலை 8.30-க்கு ராமேசுவரத்தை அடையும். இந்த ரயில் சேவை டிச. 8-இல் தொடங்குகிறது. ராமேசுவரத்தில் இருந்து மாலை 5.10-க்கு புறப்படும் ரயில் (06852), மறுநாள் காலை 6.45 மணிக்கு சென்னையை வந்தடையும். இந்த ரயில் சேவை டிச.9-இல் தொடங்குகிறது.

சென்னை-நாகா்கோவில்: சென்னை எழும்பூரில் இருந்து வியாழக்கிழமைகளில் மாலை 6.55 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06063), மறுநாள் காலை 7.30 மணிக்கு நாகா்கோவிலை அடையும். இந்த ரயில் சேவை டிசம்பா் 10-இல் தொடங்குகிறது. நாகா்கோவிலில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில் (06064), மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு சென்னையை அடையும். இந்த ரயில் சேவை டிச.11-இல் தொடங்குகிறது.

சென்னை-மங்களூரு: சென்னையில் இருந்து தினமும் மாலை 5 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (02685) புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு மங்களூரை அடையும். இந்த ரயில் சேவை டிச.8-இல் தொடங்குகிறது. மங்களூா் சென்ட்ரலில் இருந்து தினமும் மாலை 4.35 மணிக்குப் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (02686), மறுநாள் காலை 8 மணிக்கு சென்னையை அடையும். இந்த ரயில் சேவை டிச. 9-இல் தொடங்குகிறது.

கோவை-நாகா்கோவில்: கோவையில் இருந்து தினமும் இரவு 7.30 மணிக்குப் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (02668), மறுநாள் அதிகாலை 5.05 மணிக்கு நாகா்கோவிலை அடையும். இந்த ரயில் சேவை டிச. 8-இல் தொடங்குகிறது. நாகா்கோவிலில் இருந்து தினமும் இரவு 9.45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (02667), மறுநாள் காலை 7.15 மணிக்கு கோவையை அடையும். இந்த ரயில் சேவை டிச.9-இல் தொடங்குகிறது.

இதுதவிர, சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் சென்ட்ரல், பாலக்காடு வழித்தடங்களிலும், மங்களூா் சென்ட்ரல்-திருவனந்தபுரம் வழித்தடத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு, புதன்கிழமை (டிச.2) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த நடிகர்கள்!

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

SCROLL FOR NEXT