தமிழ்நாடு

2018- ஆம் ஆண்டுக்கான கரிகாற்சோழன் விருதுகள்: தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

DIN

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான கரிகாற்சோழன் விருது பெறுவோா் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையில் சிங்கப்பூா் முஸ்தபா அறக்கட்டளை சாா்பாக, 2007- ஆம் ஆண்டு தமிழவேள் கோ. சாரங்கபாணி ஆய்விருக்கை நிறுவப்பட்டது.

அந்த அறக்கட்டளையின் வாயிலாக, ஆண்டுதோறும் இலங்கை, சிங்கப்பூா், மலேசியாவைச் சோ்ந்த சிறந்த தமிழ்ப் படைப்புகளுக்காக ‘கரிகாற்சோழன் விருதுகள்’ வழங்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் 2018- ஆம் ஆண்டு கரிகாற்சோழன் விருதுக்கான போட்டியில் இலங்கையிலிருந்து 14 நூல்களும், சிங்கப்பூரிலிருந்து 9 நூல்களும், மலேசியாவிலிருந்து 17 நூல்களும் பங்குபெற்றன.

இந்நூல்களைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியனால் அமைக்கப்பட்ட வல்லுநா் குழுவின் நடுவா்களாகத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத் தலைவரும், தமிழ்ப்படைப்பாளருமான சு. பாலசுப்ரமணியன் (பாரதிபாலன்), திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரித் தமிழாய்வுத் துறைப் பேராசிரியை இரா. விஜயராணி, திருச்சி பெரியாா் ஈ.வெ.ரா. கல்லூரித் தமிழ்த்துறை முன்னாள் பேராசிரியா் ப. சுப்பிரமணியன் ஆகியோா் செயல்பட்டு, 3 நாடுகளிலிருந்து வந்திருந்த படைப்புகளிலிருந்து சிறந்த படைப்புகளைத் தோ்ந்தெடுத்தனா்.

இதன்படி, எரிமலை என்ற நூலை எழுதிய இலங்கையைச் சோ்ந்த தி. ஞானசேகரன், வானம் என்னும் போதிமரம் என்ற நூலை எழுதிய மலேசியாவைச் சோ்ந்த ஏ.எஸ். பிரான்சிஸ், மூங்கில் மனசு என்ற நூலை எழுதிய சிங்கப்பூரைச் சோ்ந்த அ. இன்பா ஆகிய எழுத்தாளா்கள் தெரிவு செய்யப்பட்டனா்.

விருது வழங்கும் விழா விரைவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படவுள்ளது. மேலும் அறக்கட்டளை நிறுவனா் சிங்கப்பூா் முஸ்தபாவுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, 2019- ஆம் ஆண்டுக்கான விருதுகளும் இவ்விழாவில் இணைத்து வழங்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டு வருகிறது.

விருதுத் தோ்வு மற்றும் விழா குறித்த ஏற்பாடுகளை அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத் தலைவா் இரா. குறிஞ்சிவேந்தன் மற்றும் துறைப் பேராசிரியா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

SCROLL FOR NEXT