தமிழ்நாடு

சண்முகா நதி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

1st Dec 2020 12:57 PM

ADVERTISEMENT


உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள சண்முகா நதி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராயப்பன்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சண்முகா நதி நீர்த்தேக்கத் திட்டம் பொதுப்பணித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. ஹைவேவிஸ் ,மேகமலை, பெருமாள் மலைப்பகுதியில் பெய்யும் மழை நீரானது இந்த நீர் தேக்கத்தில் தேங்கும்.

பருவமழைக் காலங்களில் நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவான 52.50 அடி நிரம்பியதை அடுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு வடகிழக்கு பருவ மழையால் கடந்த 10 தினங்களுக்கு முன்பாக அணையின் முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் அணையிலிருந்து திறக்கப்படும் பாசன நீரால் ராயப்பன்பட்டி, மல்லிகாபுரம், கன்னிசேர்வை பட்டி , எரசக்கநாயக்கனூர் , மற்றும் ஓடைப்பட்டி வரையில் 16 40 ஏக்கர் பரப்பளவிற்கு விவசாய பணிகள் நடைபெறும். இதன் மூலமாக ஆண்டுக்கு சுமார் 1600 டன்கள் உணவு உற்பத்தியாகும் என்றனர்.

சண்முகா நதி நீர்த்தேக்க அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Tags : dam river
ADVERTISEMENT
ADVERTISEMENT