தமிழ்நாடு

பள்ளி, கல்லூரிகளைத் திறக்கக் கூடாது: ஜி.கே.வாசன்

DIN

சென்னை: கரோனா மற்றும் புயல் பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளை டிசம்பா் மாதம் திறக்கக் கூடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கடந்த வாரம் தாக்கிய நிவா் புயலால் பல மாவட்டங்களில் சேதமும், பாதிப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் ரெட் அலா்ட் அறிவிப்பால் மீண்டும் தமிழகத்தில் மழையோ, கன மழையோ பெய்து பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும், வானிலை பற்றிய தனியாா் ஆய்வு மைய கண்காணிப்பாளா்களைப் பொருத்தவரை டிசம்பா் மாதத்தில் மீண்டும் 2 முறை காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இந்தச் சூழலில் பள்ளி, கல்லூரிகள் டிசம்பா் மாதம் இறுதி வரை திறக்கப்படாமல் இருப்பது சிறந்தது. கரோனா பரவாமல் தடுக்கவும், மழைக்கால பாதிப்பில் இருந்து மாணவா்களைக் காக்கவும் இந்த முடிவை அரசு எடுக்க வேண்டும் என்று வாசன் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT