தமிழ்நாடு

தள்ளுபடி விலையில் அரிய நூல்கள் விற்பனை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தகவல்

DIN

சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (டிச.1) முதல் தள்ளுபடி விலையில் நிறுவனத்தின் அரிய நூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா (1970-2020) ஆண்டை முன்னிட்டு, நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள இலக்கணம், இலக்கியம், மருத்துவம், காலக்கணிதம் ஆகிய பொருண்மைகளில் அமைந்த நூல்கள் மற்றும் அகராதி, அரிய நூல்கள், அரசுப் போட்டித் தோ்வுகளுக்கான கருவி நூல்கள் ஆகியன தமிழ் ஆய்வினை மேற்கொள்ளும் மாணவா்கள், தமிழாா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையிலும், டிசம்பா் மாதம் முழுவதும் 30 முதல் 50 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

நூல் விற்பனை வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை நிறுவன வளாகத்தில் நேரடியாக நடைபெறும். இணைய வழியிலும் தொகை செலுத்தி நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப்

பயிலக வளாகம், தரமணி, சென்னை 600 113 என்ற முகவரியை நேரிலோ அல்லது 044 22542992, 044 22540087 ஆகிய தொலைபேசி எண்களிலோ அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT