தமிழ்நாடு

கிராம சேவை மையக் கட்டடம் பயன்பாட்டிற்குக் கொண்டுவர பத்து ரூபாய் இயக்கம் சார்பில் கோரிக்கை

1st Dec 2020 01:38 PM

ADVERTISEMENT

 

சிங்காரப்பேட்டை அருகே கிராம சேவை மையக் கட்டடம் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர பத்து ரூபாய் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் வெள்ளக்குட்டை ஊராட்சி ஜெ.ஜெ.நகர்ப் பகுதியில் கடந்த 2014-15ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.13.12 லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மையம் கட்டடம் அரசால் கட்டப்பட்டது.

இந்த கட்டடத்திற்கு மின்சார வசதி மற்றும் தண்ணீர் வசதி இல்லை. மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டடம் 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படவில்லை. அரசு உரிய நடவடிக்கை எடுத்து இக்கட்டடத்தை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்து திறப்புவிழா காண நடவடிக்கை எடுக்கவேண்டுமென கிருஷ்ணகிரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT