தமிழ்நாடு

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: குறைதீர் கூட்டத்திலிருந்து நன்னிலம் விவசாயிகள்  வெளிநடப்பு

1st Dec 2020 01:07 PM

ADVERTISEMENT

 

நன்னிலம் : மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து நன்னிலம் பகுதி விவசாயிகள் வெளிநடப்புச் செய்து எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சாந்தா தலைமையில் செவ்வாய்க்கிழமைக் காணொளிக் காட்சி மூலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள், ஆங்காங்கே உள்ள வேளாண்மைத் துறை உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் இணைக்கப்பட்டனர். நன்னிலம் வட்டத்தில் மூங்கில்குடியில் உள்ள விவசாயத்துறை உதவி வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் வட்டார விவசாயிகள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் துவங்கியவுடன், கூட்ட அரங்கிலிருந்து தமிழக விவசாயிகள் நலச்சங்க தலைவர் ஜி.சேதுராமன், நன்னிலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.மணிமாறன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மாவை.கணேசன் ஆகியோர் தலைமையில் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்து, அலுவலகம் முன்பு, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கமிட்டனர்.

ADVERTISEMENT

பின்னர், காணொலிக்காட்சி மூலம் நடைபெற்றக் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து, மத்திய அரசின் புதிய வேளாண்சட்டங்களை எதிர்த்து நன்னிலத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்து முழக்கமிட்ட போது எடுத்த படம்.
 

Tags : delhi protest
ADVERTISEMENT
ADVERTISEMENT