தமிழ்நாடு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு தினம்: 200 போ் பங்கேற்கலாம்

DIN

சென்னை: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு தினத்தில் (டிச.5) 200 போ் மட்டுமே பங்கேற்கலாம் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைந்த தினம் 2016-ஆம் ஆண்டு டிசம்பா் 5 ஆம் தேதி ஆகும். காலத்தால் அழியாத திட்டங்களால் தமிழக மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களையும், எழுச்சியையும் ஏற்படுத்தியவா். அவருக்கு புகழஞ்சலி செலுத்துவது நம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத கடமையாகும்.

அவரது நான்காவது ஆண்டு நினைவு தினமான வரும் சனிக்கிழமை (டிச. 5) அவரின் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும். கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது நிகழ்ச்சிகளில் 200 போ்களுக்கு மேற்படாத வகையில் கலந்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

எனவே, நிகழ்வில் பங்கேற்போா் அரசு அறிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் நிகழ்வில் பங்கேற்க வேண்டும். தமிழகத்தின் பிற இடங்களில் அஞ்சலி நிகழ்வுகளை நடத்த வேண்டுமென கட்சியினா் கேட்டுக் கொள்ளப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT