தமிழ்நாடு

சங்ககிரியில் தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடக்கம் 

1st Dec 2020 12:54 PM

ADVERTISEMENT


சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வருவாய் துறையின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

சங்ககிரி, எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நவம்பர் 16ம் தேதி  வெளியிடப்பட்டன. அதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளவாறு  சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட 311 வாக்குச்சாவடி மையங்களில் நவம்பர் 21,22 ம் தேதிகளில்   நடைபெற்ற சிறப்பு சுருக்க முறை திருத்த முகாமில் புதிதாக பெயர்களை  சேர்க்க 4239 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் சிறப்பு முகாம் டிசம்பர்12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. 
இதனையடுத்து இம்முகாமில் பொதுமக்கள் புதிதாக இளம் வாக்காளர்கள் அவர்களது பெயர்களை சேர்க்கவும்,  நீக்கம், முகவரி மாற்றம் செய்தல் குறித்த பணிகளை மேற்கொள்ள பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியினை சங்ககிரி தொகுதி சட்டமன்ற தேர்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான மு.அமிர்தலிங்கம் தலைமை வகித்து கையொப்பம் செய்து தொடக்கி வைத்தார். 

சங்ககிரி உதவி தேர்தல் அலுவலரும், வட்டாட்சியர் எஸ்.விஜி,  தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட  பலர் இதில் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT