தமிழ்நாடு

உசிலம்பட்டியில் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் 

1st Dec 2020 12:19 PM

ADVERTISEMENT

 

உசிலம்பட்டி: அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் 58 கிராம கால்வாய் பாசனத்திற்கு தமிழக அரசு நிரந்தர அரசாணை வெளியிட கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உசிலம்பட்டியில் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோடு திரு முருகன் கோவில் முன்பாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் உசிலம்பட்டி பகுதியில் உள்ள 58 கிராம பாசன கால்வாய்க்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு நிரந்தர அரசாணை வெளியிட கோரிக்கை வைத்து முன்னாள் எம் எல் ஏ  பி.வி. கதிரவன் தலைமையில் மாநில தலைவர் சி. முத்துராமலிங்கம், மாநில பொதுச்செயலாளர் பசும்பொன், மாநில துணைத்தலைவர் கர்ணன், மாணவர் அணி மாநில செயலாளர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா. ஆதிசேடன் தேனி மாவட்ட செயலாளர் எஸ். ஆர் .சக்கரவர்த்தி மாவட்ட கவுன்சிலர் ரெட் காசி மகளிரணி மாநில தலைவி லட்சுமிகலா மாவட்ட நிர்வாகிகள் கலாகுமார், வடிவேலு நகர செயலாளராக ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், பால்சாமி மற்றும் கூட்டணி கட்சியினர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுதந்திரம், நகரச் செயலாளர் தங்கமலைப்பாண்டி, தலைமை செயற்குழு சோலை ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் துணைத் தலைவர் முத்துராமன், இ.காங்கிரஸ் கட்சி நகரச் செயலாளர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் தீபா பாண்டி, மாவட்ட செயலாளர் வினோத் கண்ணன், வெஸ்டன் முருகன்  புதுராஜா, மதிமுக பெரிய பாண்டி, ஜே.டி.குமார் மற்றும் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT