தமிழ்நாடு

மனைவி, மகள் கொலை வழக்கு: தூத்துக்குடி ஜவுளி வியாபாரிக்கு இரட்டை ஆயுள்

1st Dec 2020 01:26 PM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி அருகே மனைவி மற்றும் 3 வயதுக் குழந்தையை கிரைண்டர் கல்லால் அடித்துக் கொலை செய்த ஜவுளி வியாபாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

தூத்துக்குடி அருகே உள்ள மடத்தூர்  சேர்ந்தவர் சங்கர் ஜவுளி வியாபாரி இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தனது மனைவி கோகிலா மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரை கிரைண்டர் கல்லால் அடித்துக் கொலை செய்ததுடன் தனது 3 வயது மகளை சுவரில் அடித்துக் கொலை செய்துள்ளார். 

இது தொடர்பாக சிப்காட் காவல்துறையினர் சங்கரை கைது செய்து அவர் மீது  தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி பாண்டியராஜன் குற்றம்சாட்டப்பட்ட சங்கருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ.2000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். 

ADVERTISEMENT

Tags : murder
ADVERTISEMENT
ADVERTISEMENT