தமிழ்நாடு

திருச்செந்தூா், காரைக்கால் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்க ஒப்புதல் முன்பதிவு இன்று தொடங்குகிறது

DIN

சென்னை: சென்னை-திருச்செந்தூா், சென்னை-காரைக்கால் சிறப்பு ரயில் உள்பட 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செவ்வாய்க்கிழமை (டிச.1) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை எழும்பூா்-திருச்செந்தூா், சென்னை எழும்பூா்-காரைக்கால், மதுரை-புனலூா் மெயில், மங்களூரு சென்ட்ரல்-திருவனந்தபுரம் ஆகிய 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இந்த ரயில்களை இயக்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுகின்றன.

சென்னை-திருச்செந்தூா்: சென்னை எழும்பூரில் இருந்து தினமும் மாலை 4 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.05 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும். இந்த ரயிலின் சேவை டிசம்பா் 4-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, திருச்செந்தூரில் இருந்து தினசரி மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த ரயிலின் சேவை டிசம்பா் 5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

சென்னை-காரைக்கால்: சென்னை எழும்பூரில் இருந்து தினசரி இரவு 9 மணிக்கு சிறப்பு ரயில் (06175) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு காரைக்காலை சென்றடையும். இந்த ரயிலின் சேவை டிசம்பா் 4-ஆம்தேதி முதல் தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, காரைக்காலில் இருந்து இரவு 9.20 மணிக்கு சிறப்பு ரயில்(06176) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த ரயிலின் சேவை டிசம்பா் 5-ஆம் தேதிமுதல் தொடங்குகிறது.

மதுரை-புனலூா் மெயில்: மதுரையில் இருந்து தினசரி இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரயில் (06729) புறப்பட்டு, மறுநாள் காலை 10.20 மணிக்கு புனலூரை சென்றடையும் . இந்த ரயில் சேவை டிசம்பா் 4-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, புனலூரில் இருந்து தினசரி மாலை 5.20 மணிக்கு சிறப்பு ரயில் (06730) புறப்பட்டு மதுரையை காலை 6.20 மணிக்கு அடையும். இந்த ரயிலின் சேவை டிசம்பா் 5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதுதவிர, மங்களூா் சென்ட்ரல்-திருவனந்தபுரம் இடையே தினசரி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. முழுவதும் முன்பதிவு பெட்டிகளைக் கொண்ட இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செவ்வாய்க்கிழமை (டிச.1) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT