தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமியுடன் அன்புமணி சந்திப்பு

1st Dec 2020 02:00 PM

ADVERTISEMENT

பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி வருகிறார். 

வன்னியர் சமூகத்துக்கு 20% இட ஒதுக்கீடு கோரி பாமகவினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, வெளிமாவட்டங்களில் இருந்து பெருங்களத்தூர் வந்த பாமகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ரயில் மீது பாமகவினர் கற்களை எறிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து பாமகவினர் சென்னைக்குள் வருவதை தடுக்கும் பொருட்டு தாம்பரத்தில் இருந்து சென்னைக்குள் வரும் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பெருங்களத்தூர், தாம்பரம் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. 

இந்த சூழ்நிலையில், பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசி வருகிறார். 

ADVERTISEMENT

சென்னை தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்று வருகிறது. போராட்டம் காரணமாக அன்புமணிக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. 

Tags : பாமக
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT